TVK Vijay | சென்னையில் விஜய்யின் தேர்தல் பரப்புரை ரத்து?

விஜய் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
TVK Vijay | சென்னையில் விஜய்யின் தேர்தல் பரப்புரை ரத்து?
Published on

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் காணும் விஜயின் த.வெ.க. கட்சி மீது அதிக எதிர்பாார்ப்பு நிலவுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுக்க பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 04) த.வெ.க. தலைவர் விஜய் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 06) சென்னையின் அண்ணா நகர், வில்லிவாக்கம், தி நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்க திட்டமிட்டு த.வெ.க. சார்பில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டு இருந்தது.

எனினும், வில்லிவாக்கம் சிட்கோ நகர் சந்திப்பு, தி நகரில் உள்ள முத்துரங்கன் சாலையில் தேர்தல் பரப்புரை செய்ய த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

நான்கு இடங்களில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளுடன் வில்லிவாக்கம் மற்றும் தி நகரில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறி விஜய் தரப்பு பிரசாரத்தை முழுமையாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com