தமிழகத்தில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த கே.பி. முனுசாமி

அதிமுகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி வெறும் 138 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த கே.பி. முனுசாமி
Published on

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 194 தொகுதிகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான் அதிக வாக்குகள் வித்தியாத்திலான வெற்றியாகும்.

இந்த நிலையில் வேப்பனஹல்லி திமுக வேட்பாளர் 138 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பி.எஸ். சீனிவாசன் 74691 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக-வைச் சேர்ந்த கே.பி. முனுசாமி 74553 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. த.வெ.க. வேட்பாளர் 63907 வாக்குகள் பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com