TN Election 2026 | எடப்பாடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் அருண் குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
TN Election 2026 | எடப்பாடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு
Published on

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் அருண் குமார் மனுதாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு ஏற்கப்பட்டது.

அதன்பின் த.வெ.க. வேட்பாளரின் மனு பரிசீலனைக்காக எடுக்கப்பட்டது. அப்போது, த.வெ.க. வேட்பாளர் அருண்குமாரை காணவில்லை என த.வெ.க.-வின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தி.மு.க. வேட்பாளர் மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவர் மனு நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் உயர் அதிகாரி வந்த உடன் சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், த.வெ.க. வேட்பாளர் அருண்குமார் மனுவில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டி மனு நிராகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com