TN Election 2026: எண்ணூரில் தி.மு.க- த.வெ.க-வுக்கு இடையே தான் போட்டியே..! VOX POP

தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
TN Election 2026: எண்ணூரில் தி.மு.க- த.வெ.க-வுக்கு இடையே தான் போட்டியே..! VOX POP
Published on

தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய சென்னை எண்ணூர் பகுதியில் vox pops நடத்தினோம்.

இதில், அதிகபட்சமாக தவெக-விற்கே அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.தவெகவை தொடர்ந்து திமுக-வும், அதிமுக-வும் ஆதரவு பெற்றுள்ளன.

அதன்படி, எண்ணூரில் 39 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக த.வெ.க.விற்கு 20 பேர் வாக்களிப்போம் என தெரிவித்தனர்.

த.வெ.க-வை தொடர்ந்து தி.மு.க.விற்கு 11 பேரும், அ.தி.மு.க.-விற்கு 7 பேரும் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com