

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 28 இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக-வை சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக தலைவர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அண்ணாமலை உடனிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார.
இது தொடர்பாக அண்ணாலை கூறுகையில் "ஏப்ரல் 9-ந்தேதி முதல் பிரசாரத்தை ஆரம்பிக்கிறேன். இந்த முறை நான் வேட்பாளராக இல்லாத காரணத்தினால் கொஞ்சம் நேரம் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் போவேன்" என்றார்.