TN Election 2026 | இந்தியாவிலேயே அடிமை கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுக-தான்- அண்ணாமலை

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேடைக்கு மேடை அதிமுக-வை அடிமை கட்சி என்கிறார். அடிமை கட்சி என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால், அது திமுக மட்டும்தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
TN Election 2026 | இந்தியாவிலேயே அடிமை கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுக-தான்- அண்ணாமலை
Published on

கோவை தெற்கு தொகுதியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

சித்தாந்தத்தில் வேறுபாடு இருந்தாலும் அதிமுக-வும், பாஜக-வும் தீய சகத்தி திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக ஒன்றாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு எல்லோரும் பின்னால் நிற்கின்றோம். காரணம் தமிழகத்தை பொறுத்தவரை யார் முதலமைச்சர் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேடைக்கு மேடை அதிமுக-வை அடிமை கட்சி என்கிறார். 1977-க்குப் பிறகு அதிக முறை ஒரு பிராந்திய கட்சி ஆட்சி செய்தது என்றால் அது அதிமுக-தான். திமுக அதுபோன்று ஆட்சிக்கு வந்தது இல்லை. அடிமை கட்சி என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால், அது திமுக மட்டும்தான்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com