கடந்த 6 சட்டசபை தேர்தல்களில் வாக்கு சதவீதம் எப்படி?

2021 தேர்தலில் 4.58 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், தற்போது 4.83 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
கடந்த 6 சட்டசபை தேர்தல்களில் வாக்கு சதவீதம் எப்படி?
Published on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. துல்லியமான வாக்குசதவீதம் அறிவிக்கப்படும்போது இன்னும் அதிகரிக்கலாம்.

SIR நடவடிக்கையால் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் விஜயின் த.வெ.க. கட்சிக்கு வாக்களிக்க இளையோர் அதிக அளவு திரண்டதால் அதிகரித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2001-ல் இருந்து பதிவான வாக்குகளை பார்ப்போம்.

2001 தேர்தலில் 4.74 வாக்காளர்களில் 2.80 கோடி பேர் வாக்களித்தனர். இது 59.07 சதவீதம் ஆகும்.

2006-ல் 4.66 கோடி வாக்காளர்களில் 3.28 கோடி பேர் வாக்களித்தனர். இது 70.56 சதவீதம் ஆகும். சுமார் 48 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகியிருந்தன.

2011-ல் 4.71 கோடி வாக்காளர்களில் 3.68 கோடி பேர் வாக்களித்திருந்தனர். இது 78.29 சதவீதம் ஆகும். சுமார் 40 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகியிருந்தன.

2016-ல் 5.77 கோடி வாக்காளர்ளில் 4.32 கோடி பேர் வாக்களித்திருந்தனர். இது 74.81 சதவீதமாகும். சுமார் 64 லட்சம் வாக்குகள் அதிகம்.

2021-ல் 6.29 கோடி வாக்காளர்ளில் 4.58 கோடி பேர் வாக்களித்திருந்தனர். இது 73.63 சதவீதமாகும். சுமார் 26 லட்சம் வாக்குகள் அதிகம்.

தற்போது 5.78 கோடி வாக்காளர்களில் 4.83 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தோராயமான 84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும்போது சதவீதம் சற்று உயரலாம். தற்போதைய நிலையில் சுமார் 25 லட்சம் வாக்குகள் அதிகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com