அமைச்சர்களாக பதவியேற்றனர் ஷாஜகான், வன்னிஅரசு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் அமைச்சராக பதவியேற்றார்.
அமைச்சர்களாக பதவியேற்றனர் ஷாஜகான், வன்னிஅரசு
Published on

த.வெ.க. அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இடம் பெறுகிறது.

த.வெ.க. அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு எம்.எல்.ஏ. இடம்பெறுவார் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், தேசிய செயலாளரும் எம்.பி.யுமான நவாஸ் கனி ஆகியோர் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து, த.வெ.க. அமைச்சரவையில் தங்கள் கட்சி பங்கேற்பதற்கான கடிதத்தை வழங்கினர். அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சராக பதவியேற்க பாபநாசம் எம்.எல்.ஏ. ஷாஜகான் தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கான கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.

இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் விஜய் வருகை புரிந்தார். இதையடுத்து பதவியேற்பு விழா தொடங்கியது. முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் அமைச்சராக பதவியேற்றார். அமைச்சர் ஷாஜகானுக்கு ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத்தொடர்ந்து விசிகவின் வன்னி அரசு பதவியேற்றார். அவருக்கும் ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com