

தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் அவர்களது துறைகள் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
முதலமைச்சர் விஜய்: காவல், உள்துறை, பொது நிர்வாகம்.
அமைச்சர் செங்கோட்டையன்: நிதித்துறை
அமைச்சர் என்.ஆனந்த: ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை
அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனா: பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை,
அமைச்சர் அருண்ராஜ்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் வெங்கடரமணன்: உணவு மற்றும் பொது விநியோகம்
அமைச்சர் நிர்மல்குமார்: மின்சாரம் மற்றும் சட்டத்துறை
அமைச்சர் ராஜ்மோகன்: பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் பிரபு: கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
அமைச்சர் கீர்த்தனா: தொழிற்துறை ஆகியவற்றை கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.