TN Assembly Election | தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா திமுக? வடக்கு மதுரை மக்கள் சொல்வது என்ன?

சட்டசபை தேர்தலை ஒட்டி வடக்கு மதுரை மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.
TN Assembly Election | தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா திமுக? வடக்கு மதுரை மக்கள் சொல்வது என்ன?
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி வடக்கு மதுரை மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.

அதில் அப்பகுதி மக்களிடம் 38 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ஏன் போடுவீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதில் அதிமுக கட்சிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. கேள்வியின் முடிவில் அதிகபட்சமாக 20 பேர் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்கு அடுத்தப்படியாக தவெக கட்சிக்கு 12 பேரும் அதிமுக கட்சிக்கு 5 பேரும், நோட்டாவுக்கும் ஒருத்தரும் வாக்களிப்பதாக கூறினர். நாம் தமிழர் கட்சிக்கு யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com