TVK | சட்டசபை தேர்தல் - வில்லிவாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆதவ் அர்ஜுனா

சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.
TVK | சட்டசபை தேர்தல் - வில்லிவாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆதவ் அர்ஜுனா
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி நேற்று வேட்பாளர்களை அறிவித்த நிலையில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சிட்கோ நகர் சமுதாய கூடத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மைதிலியிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com