TN Assembly Election| பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்து செல்லலாமா?- தேர்தல் அதிகாரி விளக்கம்

ஒரே வேட்பாளர் பெயரில் நிறைய பேர் வேட்பு மனு செய்து போட்டியிடக் கூடிய சூழல் உள்ளது.
TN Assembly Election| பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்து செல்லலாமா?- தேர்தல் அதிகாரி விளக்கம்
Published on

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026- ஐ தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார்.

இந்த கையேட்டில் தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல் குறித்தான அனைத்து விவரங்களும் விரிவாக இடம் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேசும் போது, கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் நகர்ப்புறத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் நகர்ப்புறத்தில் வாக்குபதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது என்றும் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். மருத்துவ காரணத்திற்காக பொது மக்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம்.

சமூக வலைதளங்களில் பிரசாரம், வெறுப்பு பேச்சு சைபர் காவல் துறையின் மூலம் கண்காணிக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இருந்து கண்காணிப்பு செய்யப்படுவதாகவும் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தல் குறித்து இணையதளம் மற்றும் கடிதம் வாயிலாக புகார் ஏதேனும் அளித்தால் அதில் அவர்கள் கையொப்பமிட்டு புகார் தெரிவிக்க வேண்டும், தற்போது வரை வந்து இருக்க கூடிய மனுக்கள் கையொப்பம் இல்லாமல் வந்து உள்ளது.

ஒரே வேட்பாளர் பெயரில் நிறைய பேர் வேட்பு மனு செய்து போட்டியிடக் கூடிய சூழல் உள்ளது. தேர்தலில் ஒரே பெயரில் மற்றவர்கள் போட்டியிடக் கூடாது என்று சொல்ல முடியாது. அதனால்தான் வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய பேலட் பேப்பர் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com