253-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்

பத்மராஜன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, டெல்லி மேல்சபை எம்.பி., எம்.எல்.ஏ. மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் களம் கண்டுள்ளார்.
253-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்
Published on

மேட்டூர்:

மேட்டூரை சேர்ந்தவர் பத்மராஜன். 67 வயதான இவர் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, டெல்லி மேல்சபை எம்.பி., எம்.எல்.ஏ. மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் களம் கண்டுள்ளார். எனவேதான் இவரை தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படுகிறார்.

இதுவரை 252 தேர்தல்களில் மனு தாக்கல் செய்துள்ள இவர், நடைபெற இருக்கக்கூடிய சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதாவது 253-வது முறையாக தேர்தலில் போட்டியிட பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com