சென்னை மாவட்ட வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்? - விவரங்கள் வெளியீடு

சென்னை மாவட்ட வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்? - விவரங்கள் வெளியீடு
Published on
Summary

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விவரம் அடங்கிய கையேடு, சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

அதன்படி, தேர்தல் செலவின ஒரு நாள் வாடகை அடங்கிய விலைப்பட்டியல் விவரம் வருமாறு:-

பிளாஸ்டிக் இருக்கை (சேர்) ஒன்றுக்கு வாடகை ரூ.11, சொகுசு இருக்கைக்கு ரூ.165, சோபா ஒன்றுக்கு ரூ.380 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சி கொடி தோரணத்துக்கு (ஒரு பாக்கெட்) ரூ.40, வாழை மரம் ஒன்றுக்கு ரூ.750, ஆயிரம் வாலா பட்டாசுக்கு ரூ.650, மேள தாளம் 4 மணி நேரத்துக்கு ரூ.6,500, குதிரைகளை பயன்படுத்தினால் 4 மணி நேரத்துக்கு ரூ.6,000 செலவு செய்ய வேண்டும்.

அதேபோல, கரகாட்டம், மயிலாட்டம், மேளம், நாதசுவரம் என 3 மணி நேரத்துக்கு ரூ.11 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சால்வை ஒன்றுக்கு ரூ.150, ஆப்பிள் மாலை அணிவித்தால் ஒரு ஆப்பிள் ரூ.35, பூ மாலை பெரியது ரூ.400, தேங்காய் நடுத்தர அளவு ரூ.30, எலுமிச்சை பழம் ஒன்று ரூ.5.சேலை (பூணம்) ஒன்று ரூ.250, டீ-சர்ட் ஒன்று ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7, 20 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.35, வெஜிடபிள் உணவு மற்றும் வெரைட்டி ரைஸ் பாக்ஸ் ரூ.50. நொருக்குதீனி (உலர் பழம் தவிர்த்து) 100 கிராமுக்கு ரூ.50, இனிப்பு 100 கிராமிற்கு ரூ.90 எனவும் விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

டெம்போ டிராவல்ஸ் வேனுக்கு 15 மணி நேரம் அல்லது 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.6,700, குளிர்சாதன வசதியில்லாத டூரிஸ்ட் கார் பயன்பாட்டுக்கு 15 மணி நேரம் அல்லது 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.3,300 எனவும், குளிர்சாதன வசதியுள்ள டூரிஸ்ட் கார் பயன்படுத்தினால் 150 கிலோ மீட்டர் அல்லது 15 மணி நேரப்பயன்பாட்டுக்கு ரூ.3,400 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இன்னோவா, டவேரா, சைலோ ஆகிய வகை கார்களை பயன்படுத்தினால் 15 மணி நேரம் அல்லது 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.5,250 என செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com