TN Assembly Election: வரலாறு..! தமிழ்நாட்டில் 84.35 சதவீத வாக்குகள் பதிவு

கரூரில் அதிகபட்சமாக 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
TN Assembly Election: வரலாறு..! தமிழ்நாட்டில் 84.35 சதவீத வாக்குகள் பதிவு
Published on

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 82.24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 4,71,59,123 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

தமிழகத்தில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 84.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கரூரில் அதிகபட்சமாக 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com