

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர்வு அளிக்கப்படும்.
* 2,106 பறக்கும் படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
* வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட 7 நாளில் 5 நாள் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும். மற்ற 2 நாள் விடுமுறை நாட்கள்.
* உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாது.
* நகை வாங்க கொண்டு செல்லப்படும் பணம் உங்களுடையது தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.