திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை

முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட காரணத்திற்காக 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை
Published on

சண்முகவிலாச மண்டபம் வாயிலில் ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அர்ச்சகர் கோவிலுக்குள் பணி செய்யவும் தடை விதித்து அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அர்ச்சகரோடு இணைந்து பணம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட காரணத்திற்காக 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அர்ச்சகர்களிடம் மன்னிப்பு கடிதம் மட்டுமே கேட்டிருப்பதாகவும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் பரவும் தகவல் பொய் எனவும், பாகுபாடு எதுவும் காட்டாமல் யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வுக்குச் சென்ற தன்னிடம் ரூ.4000 லஞ்சம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com