

துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நேருநகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்., அக்பர்சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ, பி, இ, ஆர் மற்றும் பிஹெச் செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயனேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே.பார்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.