விமானப்படை சாகச நிகழ்ச்சி- வெயில் தாக்கத்தால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு

வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானப்படை சாகச நிகழ்ச்சி- வெயில் தாக்கத்தால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு
Published on

சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு உயிரிழந்துள்ளார்.

திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வான் சாகச நிகழ்ச்சயை பார்த்துவிட்டு நிகழ்ச்சி முடிந்து, வீடு திரும்பியபோது அவருக்கு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக அவரது மனைவி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (60) என்பவர் வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.

மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் குமார் (36) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால், உயிரிழப்பின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்சத்து குறைபாடு காரணமாக 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com