தூத்துக்குடி +2 மாணவி கொலை வழக்கு - குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

விளாத்திக்குளம் +2 மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி +2 மாணவி கொலை வழக்கு - குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு, நேற்று முக்கிய குற்றவாளி தர்ம முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பல்வேறுகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதாக தூத்துக்குடி எஸ்.பி. மதன் தெரிவித்தார். மேலும் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 38 வயது தர்ம முனீஸ்வரன், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே 2022-ல் ஒரு கொலை மற்றும் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த டிசம்பர் 2025-ல் ஜாமினில் வெளிவந்தவர்.

இந்நிலையில் சிறுமி வழக்கு தொடர்பாக குற்றவாளி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்.2ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com