

திசையன்விளை துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான் மொழி, கரைசுத்து உவரி, கூட்டபனை, கூடுதாழை, குட்டம், விமணங்குடி ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலை வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்தார்.