இது மசோதாவின் தோல்வியல்ல.. இந்திய ஜனநாயகத்தின் வெற்றி..!- சு.வெங்கடேசன்

மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
இது மசோதாவின் தோல்வியல்ல.. இந்திய ஜனநாயகத்தின் வெற்றி..!- சு.வெங்கடேசன்
Published on

மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமலாக்கவும், இதற்கு ஏற்ற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 534-இல் இருந்து 850 வரை அதிகரிக்க வழிவகை செய்யும் அரசமைப்பு சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, நிறைவேற்றும் வகையில் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, தொகுதி மறுவரை திருத்த மசோதா உள்ளிட்டவைகளுக்கான வாக்கெடுப்பு நேற்று (ஏப்ரல் 17) மாலை நடைபெற்றது. இதில் 489 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு கூட்டத்தொடரில் 534 உறுப்பினர்களில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதன் காரணமாக மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற மூன்றில் ஒருபங்கு வாக்குகள் கிடைக்காததால், இந்த மசோதா தோல்வியடைந்தது.

இந்நிலையில், மசோதா தோல்வியடைந்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்," பா.ஜ.க. அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com