திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: பழங்காநத்தத்தில் இந்து முன்னணி போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி

"திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு .போலீசார் அனுமதி மறுப்பு. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: பழங்காநத்தத்தில் இந்து முன்னணி போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி
Published on

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அறப்போராட்டம் நடத்த காவல்துறையினர் தடைவிதித்தனர். மதுரை மாவட்டத்தில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com