சுடுகாட்டில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜையால் பரபரப்பு

சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவா என முழக்கமிட்டனர்.ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது.
சடலத்தின் மீது அமர்ந்து பூைஜ செய்யும் காட்சி.
சடலத்தின் மீது அமர்ந்து பூைஜ செய்யும் காட்சி.
Published on

திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). டீ மாஸ்டரான இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு உடலை எரியூட்ட வந்தனர்.

இதனிடையே இறந்த பாலசுப்பிரமணியனின் உடலுக்கு அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என அவரது உறவினரான சரவணன் என்பவர் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டனிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் தன் சீடர்களுடன் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு ஓயாமரி சுடுகாட்டிற்கு வந்தார். அப்போது இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் தங்களது வழக்கமான இறுதி சடங்குகளை முடித்தனர்.

அதன் பிறகு அகோரி மணிகண்டன் தகன மேடையில் உள்ள பாலசுப்ரமணியனின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோர மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார். அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவா என முழக்கமிட்டனர்.

பின்னர் பாலசுப்பிரமணியனின் உடலுக்கு தீபாராதனை காண்பித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது. காசியில் நடைபெறக்கூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது , திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது.

மேலும் அகோரி மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் தன் தாயார் சடலத்தின் மீது அமர்ந்து ஆன்ம சாந்தி பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com