தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்: முதல் 5 அணிகளை தேர்வு செய்யும் இறுதிச் சுற்று- நடுவர் குழுவில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்

தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச் போட்டியில் தமிழகம் முழுவதிலுமுள்ள 165 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 779 திட்டபங்களுடன் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்
தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்
Published on

ஜி.டி.என் படக்குழுவினர் வர்கீஸ் மூலன், டிரைகலர் பிக்சர்ஸ் மற்றும் தினத்தந்தி குழுமம் இணைந்து நடத்தி வரும் 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்', தமிழகம் முழுவதிலுமுள்ள பொறியியல் மாணவர்களுக்கான ஒரு முக்கிய புத்தாக்கத் தளமாக உருவெடுத்துள்ளது.

அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் தீர்வுகளை உருவாக்க இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்கு, மாநிலம் முழுவதிலுமுள்ள மாணவர்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்தது. தமிழகம் முழுவதிலுமுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கக்கூடிய இந்த போட்டியில், நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் வாழ்க்கையை எளிதாகவும் திறமையாகவும் மாற்றும் ஆற்றல் கொண்ட புதுமையான யோசனைகளையும், திட்டங்களையும் முன்வைக்குமாறு பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் தமிழகம் முழுவதிலுமுள்ள 165 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 779 திட்டங்களுடன் கலந்து கொண்டனர். இது மாணவர்களின் புத்தாக்கத்தின் அளவையும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தீர்வுகளில் வளர்ந்து வரும் ஆர்வத்தையும் பிரதிபலித்தது.

நியாயமான மற்றும் முழுமையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதற்காக, திட்டங்களை மதிப்பாய்வு செய்து ஷார்ட் லிஸ்ட் செய்ய, 10 பேர் கொண்ட ஒரு பிரத்யேக நடுவர் குழு அமைக்கப்பட்டது. விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, நடுவர் குழு அரையிறுதிச் சுற்றுக்காக 36 சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்தது.

நேற்றைய அரையிறுதியில் சுமார் 9 மணி நேரம் இந்த 32 அணியின் திட்டங்களை நடுவர் குழு மதிப்பீடு செய்தது. இதில் இருந்து 12 அணிகளை இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்தது. இன்று 12 அணிகளில் முதல் ஐந்து இடங்கைளை பிடிக்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 12 அணிகளில் வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்வதற்கான நடுவர் குழுவில் இஸ்ரோவின் விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன் இணைகிறார்.

நடுவர் குழு 12 அணிகளில் சிறந்த 5 அணிகளை இன்று இரவு தேர்வு செய்யும். நாளை நடைபெற இருக்கும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறந்த 5 அணிகள் எவை என்பது அறிவிக்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு நடிகர் ஆர். மாதவன் பரிசுத் தொகையை வழங்குவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com