மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4ம் தேதி கிடைக்கும்- த.வெ.க நிர்மல்குமார்

தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4ம் தேதி கிடைக்கும்- த.வெ.க நிர்மல்குமார்
Published on

தமிழகத்தில் கடந்த 23ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.

தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், நடைபெற்ற தேர்தல் குறித்து தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் வரும்.

40 வருடங்களாக ஏமாற்றிய ஒரு கும்பலிடம் இருந்து விடுதலை கிடைக்க ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர் அவர்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4ம் தேதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com