மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 117 கன அடியாக சரிவு

காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 117 கன அடியாக சரிவு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.

அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 121 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 117 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com