‘எல்.பி.ஜி. விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

தேர்தல் முடிந்தவுடன் எல்.பி.ஜி. விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘எல்.பி.ஜி. விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்’ - முதலமைச்சர் ஸ்டாலின்
Published on

வணிக சிலிண்டருக்கான விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்.

தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் எல்.பி.ஜி. விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசியப்போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.

இந்த எல்பிஜி விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com