தாயுமானவர் திட்டம் - 18 மண்டலங்களில் இன்றும் நாளையும் ரேஷன் பொருட்கள் விநியோகம்

990 நியாய விலைக்கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உள்ளனர்.
தாயுமானவர் திட்டம் - 18 மண்டலங்களில் இன்றும் நாளையும் ரேஷன் பொருட்கள் விநியோகம்
Published on

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது தாயுமானவர் திட்டம். இந்த திட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

முதியவர்கள் உடல்நிலை பாதிப்பால் ரேஷன் பொருட்களை நியாய விலைக்கடைகளுக்கு நேரில் சென்று பெற முடியாதவர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தாயுமானவர் திட்டம் தொடர்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 2, 3 தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தா​யு​மானவர் திட்டத்​தின் கீழ், சென்​னை​யில் 18 மண்​டலங்​களில் இன்று முதல் 2 நாட்​களுக்கு பயனாளி​களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்​கள் விநியோகிக்கப்படும்.

சென்னையில் அண்ணா நகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 நியாய விலைக்கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com