நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க மறுப்பு

தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க மறுப்பு
Published on

பணகுடி:

தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிவடைய உள்ள தருவாயில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாநகர் மற்றும் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.

வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் அந்த நோட்டுக்களை வாங்க மறுப்பதால் பெரும்பாலானவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்கப்படாது என்ற நிர்வாகங்களின் அறிவிப்பால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com