தமிழ்நாடு முழுவதும் 1,67,743 பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வு- தேர்வை எழுத உற்சாகமாக வந்த தேர்வர்கள்!

தமிழ்நாடு முழுவதும் 613 தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன.
TET exam
Published on

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று தாள் இரண்டிற்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் 1,67,743 பேர் இதுதேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் 613 தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன.

இத்தேர்வை எழுத இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று, மிகுந்த உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் நுழைந்தனர்.

தேர்வு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள்:

தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தத்தமது தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 9:30 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காலை 10:00 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும்.

மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்களை தேர்வர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், தேர்வு அறைக்குள் பெல்ட், ஷூ மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து வரவும் அனுமதி வழங்கப்படவில்லை.

முதல் தாளின் தாக்கம் என்ன?

நேற்று நடைபெற்ற முதல் தாள் தேர்வு எதிர்பார்த்ததை விட சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினார். இந்நிலையில் இன்றைய இரண்டாம் தாள் தேர்வின் வினாக்கள் குறித்த பரபரப்பு தேர்வர்களிடையே பதற்றத்தை நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com