மீண்டும் சர்ச்சை- ஆளுநர் விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். தடுத்து நிறுத்தி, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் சர்ச்சை- ஆளுநர் விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
Published on

மதுரையில் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் இன்று நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அப்போது, திடீரென அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர், தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம்' என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com