தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி- மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி- மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி
Published on

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com