சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்
ரெயில்
Published on

கன்னியாகுமரி:

சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை கன்னியாகுமரி ரெயில் நிலையம் வந்தடைந்தது.

ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். அதன்பின்னர் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் 32 வயது மதிக்கதக்க வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து ஊழியர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரெயில் பெட்டியில் மயங்கி கிடந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயிலில் மர்மமான முறையில் இறந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த ஹாசன் என்பதும், அவரது மனைவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com