2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர்.

இவரது 2-வது மனைவி வெண்ணிலா (28) மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4).கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார்.

இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்களுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

எர்ணாகுளம்-ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.

இதில் வெண்ணிலா மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

அங்கு விரைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com