விஜயகாந்த் உடல் தே.மு.தி.க. அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் கொண்டு செல்லப்படுகிறது

தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.
விஜயகாந்த் உடல் தே.மு.தி.க. அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் கொண்டு செல்லப்படுகிறது
Published on

தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார்.

மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்த்-இன் இறுதி ஊர்வலம் துவங்கும் என்றும் மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com