'கண் சிவந்தால் மண் சிவக்கும்' பாடலை வெளியிட்டு கவிஞர் வைரமுத்து மே தின வாழ்த்து

உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள்... இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்...
'கண் சிவந்தால் மண் சிவக்கும்' பாடலை வெளியிட்டு கவிஞர் வைரமுத்து மே தின வாழ்த்து
Published on

சென்னை :

மே தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் தள பக்கத்தில் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற பாடலை வெளியிட்டு கூறியிருப்பதாவது,

உழைப்பு, காதல், பசி

இந்த மூன்றுமே

மண்ணுலகை இயக்கும்

மகா சக்திகள்

அந்த உழைப்பு

உரிமை பெற்றநாள்

இந்த நாள்

தூக்குக் கயிற்றுக்குக்

கழுத்து வளர்த்தவர்களும்

குண்டுகள் குடைவதற்காக

நெஞ்சு நீட்டியவர்களும்

வீர வணக்கத்துக்குரியவர்கள்

இந்தச் சிறப்பு நாளுக்கு

ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை

எழுத்து வைரமுத்து

இசை இளையராஜா

குரல் ஜேசுதாஸ்

இந்தப் பாட்டு

இந்த மூவருக்கு மட்டுமல்ல

உழைக்கும் தோழர்

ஒவ்வொருவருக்கும் சொந்தம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com