வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.45 அடியாக உள்ளது. 124 கன அடி நீர் வருகிறது. 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது.மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.35 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை மாநகர், தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உசிலம்பட்டி, சேடப்பட்டி பகுதி குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழையின்போது முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது. அதன் பின்னர் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரியத்தொடங்கியது. இதனால் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.44 அடியாக உள்ளது. மேலும் நீர்வரத்து 717 கன அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே அதனை சமாளிக்க பொதுப்பணிதுறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி வைகை அணையிலிருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீரை இருப்பு வைத்து நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பருவமழை ஜூன் மாதம்தான் தொடங்கும், எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.45 அடியாக உள்ளது. 124 கன அடி நீர் வருகிறது. 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.35 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 102.34 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com