2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- சமூக வலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு

சமூக வலைதளங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் போஸ்டர்கள் உலாவி வருகிறது.போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- சமூக வலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு
Published on

அந்தியூர்:

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் அதாவது ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் சமூக வலைதளங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் போஸ்டர்கள் உலாவி வருகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் மலர்ந்தது 8-11- 2016. உதிர்ந்தது 19-5- 2023-என்றும் 2 ஆயிரம் நோட்டு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்ற வாசகத்தையும் அதில் அச்சடிக்கப்பட்டு கண்ணீர் சிந்துவது போல் படங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com