திருவள்ளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி- கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தேவஅதிசயம் தலைமை தாங்கினார். 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி- கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்த்திட பேரணி நடை பெற்றது.

இந்த பேரணிக்கு தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தேவஅதிசயம் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் நாகராஜன், இளையராஜா மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திவ்யா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுந்தரம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 38 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்குவோம். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மேலும் ஒட்டுமொத்த தொகை ரூபாய் 5 லட்சம், காலி பணியிடங்களை நிரப்புவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com