ராக்கெட் விழுந்து குடிசை வீடு எரிந்தது

வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராக்கெட் விழுந்து குடிசை வீடு எரிந்தது
Published on

கடலூர்:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ராக்கெட் வெடி வெடித்துள்ளனர்.

சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் அனிதா என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

அப்போது ராக்கெட் நேராக குடிசை வீட்டின் மேல் விழுந்து வெடித்து சிதறியதில் வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் வீடு முழுவதுவமாக எரிந்து நாசமானது.

இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, நகை மற்றும் கல்வி சான்றிதழ்கள் போன்றவை எரிந்து நாசமானது.

விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com