காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு, தடயவியல் நிபுணர்கள் 2-வது நாளாக ஆய்வு

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு, தடயவியல் நிபுணர்கள் 2-வது நாளாக ஆய்வு
Published on

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தார்.

மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான குழுவினரும் இன்று 2-வது நாளாக சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

அப்போது போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்கள் அங்கேயே விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com