நாகை அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடு திருடிய கும்பல்

ஆடுகளில் ஒன்றை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடு திருடிய கும்பல்
Published on

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பைக், லோடு வேன் மற்றும் சொகுசு கார்களில் வந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தெற்கு பொய்கைநல்லூர் வீட்டில் ஆடுகள் மேய்சலுக்கு கொண்டு சென்று பின்னர் ஆடுகளின் உரிமையாளர் வீட்டில் ஆடுகளை எல்லாம் கட்டி கவைத்து விட்டு, பின்னர் அவர் தூங்க சென்றார்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து முன்பக்க கதவை திறந்து ஒருவர் வேகமாக கீழே இறங்கினார். அங்கிருந்த ஆடுகளில் ஒன்றை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனை வைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை துரிதப்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com