146-வது பிறந்தநாள்: பெரியாருக்கு ராமதாஸ் புகழாரம்

தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூக நீதியும், சுயமரியாதையும் தான்.
146-வது பிறந்தநாள்: பெரியாருக்கு ராமதாஸ் புகழாரம்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது.

தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூக நீதியும், சுயமரியாதையும் தான். அவற்றை போதித்தவர் தந்தைப் பெரியார் தான். அவரது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன் சமூக நீதியையும், சுயமரியாதையையும் வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com