புழல் ஜெயிலில் கைதிகள் 'திடீர்' மோதல்

சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புழல் ஜெயிலில் கைதிகள் 'திடீர்' மோதல்
Published on

சென்னை:

புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் கடந்த 9 மாதத்துக்கு முன்பு அடிதடி வழக்கில் புரசைவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்மானுவேல் (வயது 21) என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் அவர் சிறையின் வெளியே அமர்ந்திருந்த போது அங்கு ஏற்கனவே விசாரணை சிறையில் இருந்த ஓட்டேரியை சேர்ந்த சூர்யா(23) மற்றும் புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த நித்தின்குமார் (23) ஆகியோர் வந்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது மோதலாக மாறியது. கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் சிறைவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த தாக்குதலில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது.அவர்களுக்கு சிறை மருத்துவர்கள் சிசிச்சை அளித்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக இம்மானு வேலுடம் மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஜெயிலின் சிறை வெளிப்புற காம்பவுண்ட் சுவர் அருகில் வெளியில் இருந்து வீசப்பட்ட பார்சலை சிறை காவலர்கள் கண்டெடுத்தனர். அதனை பிரித்து பார்த்தபோது 3 செல்போன்கள் இருந்தது. அதனை சிறைக்குள் வீசியது யார்? எந்த கைதிக்கு கொடுக்க வீசப்பட்டது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com