சென்னை அருகே கரையை கடக்கும் 'ஃபெங்கல்' - பிரதீப் ஜான் கணிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை அருகே கரையை கடக்கும் 'ஃபெங்கல்' - பிரதீப் ஜான் கணிப்பு
Published on

சென்னை:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஃபெங்கல் புயலானது சென்னை - கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே வருகிற 30-ந்தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் 30-ந்தேதி கரையை கடக்கும் போது சென்னையில் அதிகனமழை பெய்யும். புயல் கரையை கடந்த பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று முதல் மிதமான மழை தொடங்கி படிப்படியாக புயல் கரையை கடக்கும் 30-ந்தேதி கனமழை கொட்டி தீர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com