தென்மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு

பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
தென்மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு
Published on

மதுரை:

வருகிற 23-ந்தேதி அன்று ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை உள்ளிட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை, தொப்பி அணிந்து பங்கேற்கவும், மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள வழித்தடத்தில் பேரணியாக செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com