பல்லடம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து வட மாநில தொழிலாளி பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து வட மாநில தொழிலாளி பலி
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இன்று காலை அங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபன்சிங்(வயது 48) என்பவர் மண் சரிவில் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பாபன்சிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com