திருமணம் ஆகாமல் கர்ப்பம்- தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்சு கைது

ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.எழும்பூர் அரசு மருத்துவமனையில் நர்சு சிகிச்சை பெற்று வந்தார்.
திருமணம் ஆகாமல் கர்ப்பம்- தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்சு கைது
Published on

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் தியாகராய நகர் சவுத்போக் பகுதியில் உடன் வேலைபார்க்கும் தோழிகளுடன் தங்கி இருந்தார்.

இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் திருமணம் செய்யாமல் நெருங்கி பழகினார். இதில் நர்சு கர்ப்பமானார்.

இந்த நிலையில், அறையில் இருந்தபோது 7 மாதமாக கர்ப்பிணியாக இருந்த நர்சுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற நர்சு தனக்கு தானே பிரசவம் பார்த்தார்.

அப்போது குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் அதன் ஒரு காலை வெட்டி எடுத்தார். இதில் பெண் குழந்தை இறந்தது. நர்சின் அலறல் சத்தம் கேட்டு வந்த உடன் தங்கி இருந்த தோழிகள் குழந்தையின் உடலையும், நர்சையும் மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நர்சுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், பிரசவத்தின் போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் அந்த பெண் குழந்தை இறந்து இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நர்சு மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்சை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை இறந்ததால் நர்சு மீது 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com