நாசரேத் அருகே டிராலி மோதி தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவன் பலி

டிராலியை ஓட்டி வந்த டிரைவர், தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்ற சரவணமாரி விலக செய்வதற்காக ஒலி எழுப்பி உள்ளார். வேறு வழியில்லாமல் டிராலி டிரைவர் பிரேக் போட்டார்.
நாசரேத் அருகே டிராலி மோதி தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவன் பலி
Published on

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் ரோசையா. இவரது மகன் சரவணமாரி(வயது 16). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு, ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை மூக்குப்பீறி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தண்டவாளத்தை ஆய்வு செய்யும் டிராலி வாகனம் வந்துள்ளது.

அப்போது டிராலியை ஓட்டி வந்த டிரைவர், தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்ற சரவணமாரி விலக செய்வதற்காக ஒலி எழுப்பி உள்ளார். ஆனால் அவர் காதில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் அவருக்கு சத்தம் கேட்க வில்லை. இதனால் தண்டவாளத்தில் அவர் தொடர்ந்து நடந்து சென்றார்.

இதனால் வேறு வழியில்லாமல் டிராலி டிரைவர் பிரேக் போட்டார். ஆனாலும் வேகத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதனால் அந்த வாகனம் சரவணமாரி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று சரவணமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com